ஹம்பந்தோட்டையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
குழுமீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம்
தொடர்பில் பிரதி பொலிஸ் மாஅதிபர் தலைமையில் விசாரணை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற
உறுப்பினர் அஜித் பெரேரா பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன
தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சம்பவத்தை எதிர்நோக்கிய பாராளுமன்ற
உறுப்பினர்களிடம் நாளைய தினம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளதாகவும்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து
தாக்குதலை மேற்கொண்ட மற்றும் அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற
உறுப்பினர்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார்
கடமையை தவறவிட்டார்களா? என்பது தொடர்பிலும் விசாரணைகளின்போது கவனம்
செலுத்தப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன
தெரிவித்துள்ளார்.
இதன்போது பொலிஸார் தவறிழைத்தமை உறுதி
செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
எனவும் அவர் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை
விமான நிலையம் ஆகியவற்றை பார்வையிடுவதற்காக சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின்
பாராளுமன்ற உறுப்பினர் குழுமீதே நேற்று முன்தினம் இந்த தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
Leave A Reply