‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப்
மதுரை: செல்போனில் ஒரு குறிப்பிட்ட எண்ணை அழைத்து 'ஹலோ' என்று சொன்னால், பதிவு செய்யப்பட்ட 'அம்மா வாய்ஸ்' கேட்டு முடிந்ததும், மூன்றே மணிநேரத்தில் அழைத்த எண்ணுக்கு ரூ.200க்கு டாப்-அப் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஏப். 24ம் தேதி நடக்கிறது. வாக்காளர்களை குஷிப்படுத்த Ôஅம்மா வாய்ஸ்Õ என்ற பெயரில் அதிமுக திட்டங்களை தெரிந்து கொள்ள '95437 78899' என்ற செல்போன் எண்ணில் அழைக்கலாம் என டிவியில் விளம்பரம் செய்யப்படுகிறது.
இந்த எண்ணை செல்போனில் அழைத்தால் இணைப்பு கிடைக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதாவின், ‘40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்வீர்களா...?' என்ற பதிவு செய்யப்பட்டகுரல் ஒலிக்கிறது. இதன் பின்னர் 3 மணிநேரத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட பிரீபெய்ட் எண்ணுக்கு ரூ.200 டாப்-அப் செய்வதாக தகவல் பரவியது. அடுத்த சில மணிநேரத்தில் வேறு யாருக்கும் டாப்-அப் ஆகவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினர்.
No comments:
Post a Comment
Leave A Reply