தங்காலையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக் கொலை
செய்யப்பட்டு அவரது காதலியான ரஷ்ய யுவதி விக்டோரியா அலெக்ஸ்சான்ட்ரா
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் சாட்சியாளரான தங்காலை
ஹோட்டலின் முகாமையாளரான ஆர்.பி.தரங்கா பீரிஸ் சுகயீனமுற்றுள்ளதாக
நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இந்த தீர்மானத்தை
மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும்
வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி வல்கம,
சாட்சியாளரான தங்காலை ஹோட்டல் முகாமையாளருக்கு இன்று அறிவித்தல்
பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply