கடற்படை
முகாம் நிர்மாணிக்கப்பட்டமையினால் வில்பத்து வனாந்தரத்தை அண்மித்த
பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்று வெளியாகியுள்ள
தகவல்களை தேசிய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு
நிராகரித்துள்ளது.இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடற்படை முகாம் முள்ளிக்குளம் பிரதேசத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த முகாம் நிர்மாணிக்கப்பட்டமையால் காணிகளை இழந்த முஸ்லிம் குடும்பங்கள், கடற்படையின் உதவியுடன் மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
கடற்படை முகாம் அங்கு நிர்மாணிக்கப்படமையினால் வேறெந்தவொரு முஸ்லிம் குடும்பமும் இடம்பெயரவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply