சூயிங்கம், சிக்லெட், சாக்லேட் என எதையாவது வாயில் போட்டு அசை போடுவதால் எந்தப் பலனும் இல்லை. அதற்குப் பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். அது நல்ல பலனைத் தரும்.
இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.
சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.
No comments:
Post a Comment
Leave A Reply