மாதம்பை - இரட்டகுளம் பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி
மரத்துடன் மோதியதில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர்
காயமடைந்துள்ளனர்.
இன்று பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், தெஹிவலையைச் சேர்ந்த சிவபாலன் மயூரா (25) எனும் பெண்ணே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த கார் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையே மயூரா எனும் குறித்த யுவதி மரணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply