பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் கோஜ்ரா பகுதியைச் சேர்ந்தவர் சபாத் மஷி (வயது 44). இவரது மனைவி ஷகுப்டா மஷி. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இஸ்லாமிய மதம் பற்றி அவதூறு செய்திகளை பரப்பியதாக கூறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25–ந்தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் கடந்த 8 மாதங்களாக நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, நீதிபதி அமெர் ஹபீப், தம்பதியருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
இதுகுறித்து மரண தண்டனை விதிக்கப்பட்ட தம்பதியரின் வக்கீல் நதீம் ஹசன் கூறுகையில், ‘‘முன்விரோதம் காரணமாக இவர்கள் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையிடுவோம்’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply