தென்கொரிய கடற்பரப்பில் பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கப்பல் விபத்தை அடுத்து காணாமல் போயுள்ள சுமார் 300 பேரை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கப்பலுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு மின்விளக்குகளை பயன்படுத்து நேற்றிரவு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
கடுமையான நீரோட்டம் காரணமாக கப்பலுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் சூழியோடிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தக் கப்பலில் 470 பேர் வரை பயணித்துள்ளதுடன் சுமார் 179 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்
கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பாடசாலையொன்றின மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களே இந்த அனர்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply