blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 29, 2014

காவிக்கும் ஜிப்பாவுக்கும் பொருந்தும் பொதுச்சட்டம் வேண்டும்

மஞ்சள் காவியுடைக்கும் ஜிப்பாவுக்கும் பொருந்தும் வகையிலான ஒரே சட்டம் நாட்டில் அமுலில் இருக்க வேண்டும் என தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
சமய முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் பிரிவொன்றை உருவாக்கியுள்ளமையானது இந்தப் பிரச்சினைக்கு சிறந்தவொரு தீர்வாக அமையாது என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்த பொலிஸ் பிரிவினால் சமய முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது என்றும் கூறினார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த பொலிஸ் விசாரணைப் பிரிவானது மத விவகார பொலிஸார் உருவாவதற்கு வழிசமைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாத வகையில் மஞ்சள் காவியுடைக்கும் ஜிப்பாவுக்கும் பொருந்தும் வகையிலான ஒரே சட்டம் நாட்டில் அமுலில் இருக்க வேண்டும் என அமைச்சர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►