2ஆம் உலக மகா யுத்த காலத்தின்போது பிரித்தானியாவின் ஆட்சிக்குட்படிருந்த இலங்கையின் (சிலோன்) கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு கடற்பகுயிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜப்பானின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க பிரித்தானியா தனது எச்.எம்.எஸ் ஹேர்மெஸ் மற்றும் எச்.எம்.ஏ.எஸ் வெம்பயர் ஆகிய இரு கப்பல்கள் திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கும் ஜப்பான் படையினர் தேடுதல் மேற்கொள்ளவுள்ளதை அறிந்து அங்கிருந்து தெற்குப் பகுதிக்கு அனுப்பிய வேளையில் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து ஜப்பான் விமானப்படையினால் இரு கப்பல்களும் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டன.
இத்தாக்குதலில் கப்பலின் கெப்டன்கள் உட்பட 307 ஆண்கள் பலியாகினர். இச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 72 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
No comments:
Post a Comment
Leave A Reply