மாமியரை கொதிநீர் ஊற்றி கொலைசெய்த மருமகளுக்கு 41 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கொலராடோ ஸ்பிரிங் பகுதியைச் சேர்ந்த எலிசெபத் ரெய்னி என்ற 20 வயது பெண்ணுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் தனது மாமியரான டெபோரா ரெய்னோ (வயது 59) என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம்
மிகவும் கொடூரமாக கொலைசெய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எலிசெபத்துக்கு குழந்தையொன்று பிறந்துள்ளது. தனது கணவர், மாமியார் மற்றும்
குழந்தையுடன்; தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த மேற்படி பெண்
ஒருநாள், தனது மாமியாரை கொதிநீரில் துக்கி வீசியுள்ளதுடன், சலவைத்தூளை
மூக்கிலும் வாயிலும் ஊற்றி குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர், கணவர் வருவதற்குள் மாமியாரின் உடலை காற்றடைக்கப்பட்ட மெத்தையில் மறைத்து வைத்துள்ளார்.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற பொலிஸார் குறித்த பெண்ணை கைதுசெய்வதற்காக
வந்தபோது குழந்தையானது கத்தியொன்றை காட்டி அழுதுள்ளது. இதன்போது குழந்தையை
பொலிஸாரை நோக்கி வீசிவிட்டு அப்பெண் தப்பிக்க முயன்றுள்ளார்.
எனினும் அவரை மடக்கிப்பிடித்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கணவனும் மனைவியும் விவாகரத்தான நிலையிலேயே வாழ்ந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
'என்னை உனது மனைவிக்கு பிடிக்கவில்லை' என தனது தாயார் கூறியதாகவும்
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் நீண்ட நாட்கள்; வாக்குவாதங்கள்
இடம்பெற்று வந்ததகவும் குறித்த பெண்ணின் கணவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, April 9, 2014
மாமியரை கொதிநீர் ஊற்றி கொலைசெய்த மருமகளுக்கு 41 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
-
The BA is a 3 year programme starting at Level 3. Each year is divided into two semesters. Each semester you can offer courses worth a ma...
-
Diploma in Youth Development is a programme offe...
No comments:
Post a Comment
Leave A Reply