blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, April 6, 2014

கல்முனை தொகுதியின் அபிவிருத்திக்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 161 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கல்முனை தொகுதியின் அபிவிருத்திக்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 161 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு மேலதிகமாக ஐரோப்பிய யூனியன் மற்றும் திவிநெகும திணைக்களம் ஆகியவற்றின் நிதிகளும் கிடைக்கப்பெறவுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளிலான 'கிராமிய மக்கள் ஒன்று கூடலும் நடமாடும் சேவையும்' சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில்  சனிக்கிழமை (05) இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


எமது நாட்டின் ஜனாதிபதி 30 வருட காலம் புரையோடிப் போயிருந்த யுத்தத்தை 4 வருடங்களில் எவ்வாறு முடிவுக்கு கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்தினாரோ அதேபோல் 5 வருடங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி தனிமனிதனுடைய வருமானங்களை அதிகரிக்கச் செய்து நாட்டில் வறுமையை இல்லாதொழிக்கும் செயற்திட்டத்தினை முன்னெடுத்தும் வருகின்றார்.


விவசாயம், விலங்கு வேளாண்மை, கைத்தொழில் போன்ற துறைகளை அபிவிருத்தியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக  வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலான நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.



சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்;ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச, அரச சார்பற்ற திணைக்களங்களின் மற்றும் அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►