blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, February 19, 2015

நான் அரசியலில் இருந்து விலகமாட்டேன்: அசாத் சாலி

asath-sali-udaya-gammanpilaநுகேகொடையில் நடைபெற்ற பொதுக் கூடத்திற்கு முடியும் என்றால் 5 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி காட்டுங்கள் என்று விமல் வீரவன்சவுக்கே சவால் விடுத்திருதேன்.

ஆனால் உதய கம்பன்பில அதனை தவறுதலாக புரிந்து கொண்டு என்னை அரசியலிருந்து விலுமாறும் அவ்வாறு விலகாவிட்டால் நான் நடமாடும் பிணம் என்று கூறியிருந்தார்.

எனவே தான் அரசியலிருந்து விலகப் போவதில்லை என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

‘மஹிந்தவுடன் நாட்டை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது கூட்டமொன்று நுகேகொட பகுதியில்  நேற்று நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்திரு மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்பன்பில,

இன்றைய கூட்டத்திற்கு முடியும் என்றால்  5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை ஒன்று திரட்டி காட்டுங்கள் என அசாத் சாலி சவால் விடுத்தார். 

இங்கு வர உள்ள மக்கள் கூடத்தின் எண்ணிக்கையை கணக்கெடுக்க அவருக்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன்.  ஆனால் தலைமைத்துவம் அவருக்கு அனுமதி வழங்கியிருக்காது.

இந்த மக்கள் கூட்டத்தை பார்த்த பிறகும் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றால் ஒரு நடைபிணத்துக்கு ஒப்பாவார் என கூறியிருந்தார். இந்நிலையிலேயே அசாத் சாலி இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►