ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போன்ற தோற்றத்தை கொண்ட இந்த ஆர்.ஏ. சிறிசேன, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரச நிறுவன சூழலில் தங்கியிருந்தாகவும் கூறப்படுகிறது.
தனியான பயிற்சியாளர் இவருக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசுவது போலவும் அவரது நடை உடை பாவனை பற்றி பயிற்சிகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் இவற்றுக்கான சகல செலவுகளையும் அரச ஊடகங்களே ஏற்றிருந்தன இதனை தவிர ஆர்.ஏ. சிறிசேன நிதியம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த நிதியம் போலியானது எனவும் தெரியவந்துள்ளது. ஒய்வுபெற்ற கிராம உத்தியோகஸ்தரான ஆர்.ஏ. சிறிசேன வீரகெட்டிய மெதமுலன பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply