எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, February 17, 2015
இவரை கண்டால் உடன் தகவல் தரவும்: பெண்களை ஏமாற்றி இன்ரர்நெட்டில் விற்கும் நபர்!
படத்தில் இருப்பவரை கண்டால் உடனடியாக பொலிஸூக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இணையத்தளங்களின் ஊடாக பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் தேடப்பட்டுவருகின்றார்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே இந்த சந்தேகநபரை கைதுசெய்துசெய்வதற்கு தேடிவருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், அதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.
இவரின் பெயர் திஸநாயக்க முதியன்சலாகே சுஜித் நிலந்த. 1973 ஆம் ஆண்டு பிறந்தவர்.வதிவிடத்திலிருந்து தப்பியோடியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலக்கம்161/12, பன்சலவத்தை, களுகல்பிட்டிய, ஸ்பிரிங்வெலிவீதி, பதுளை என்ற முகவரியிலேயே இவர் வசித்துள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 011-2422176 அல்லது 011-2326979 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸ் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று தென்படவுள்ளது.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிலோன்டொபாகோ நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...
No comments:
Post a Comment
Leave A Reply