தற்போதைய அரசியல் நிலவரமும், நல்லாட்சிக்கான எமது பங்களிப்பும் எனும் தலைப்பில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சனிக்கிழமை மாலை ஒழுங்கு செய்யப்பட்டு எஸ்.முபாரக் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சிலர் குழப்பம் விளைவித்ததால் நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரச்சார செயலாளர் சிராஜ் மஸ்ஹுர் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது சபையில் இருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டதால் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து கேள்வி கேட்டவர்கள் குழப்பம் விளைவித்ததுடன் மண்டபத்தின் கதிரைகளையும் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். இச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் உரையாற்ற இருந்த வேளையில் தொடராக இடம்பெற்ற அமைதியின்மையின் காரணமாக கூட்டம் இடைநடுவே கைவிடப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் எஸ்.முபாரக் ஆசிரியர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் மற்றும் பிரச்சார செயலாளர் சிராஜ் மஸ்ஹுர் ஆகியோர் உரையாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி ஒருவரது ஆதரவாளர்களே கூட்டத்தை தொடர அனுமதிக்காமல் இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பின்னர் கல்முனை பொலிசார் வரவழைக்கப்பட்டு நிகழ்வுக்கு வருகைதந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் உட்பட அதிதிகள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அக்கரைப்பற்றில் நடைபெற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கூட்டத்தையும் மு.கா. ஆதரவாளர்கள் சிலர் குழப்ப முயற்சித்ததாக தெரிய வருகிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, January 25, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
நிந்தவூர் அல்-ஈமான் அழைப்பு வழிகாட்டல் நிலைய ஜனாஸா குழுவிற்கான பயிற்சிக் கருத்தரங்கு நேற்று செவ்வாய்க் கிழமை (08-04-2014) அல்-ஈமான் அ...
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply