blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, January 21, 2015

சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராவதை ரணில் விரும்பவில்லை!!??

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவி விலக்குவது தொடர்பான ஆவணத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையொப்பமிடவில்லையென குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகமொன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு அவரது இடத்திற்கு மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார்.

தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் மொஹானை பதவி விலக்கி சிராணியை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிக்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தனர்.

ஆனால் மொஹானை பதவி விலக்குவது தொடர்பான ஆவணத்தில் ரணில் கையெழுத்திடாமையால் சிராணி பிரதம நீதியரசராக பதவி வகிப்பதனை ரணில் விரும்பவில்லையென்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில், சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக்குவதென்ற உறுதிமொழியும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►