
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள கிழக்கு மாகாண கூட்டணி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை வகிக்கும்.
மேலும், அமையவுள்ள கூட்டணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் முதலமைச்சர் பதவியைத் தன் வசம் வைத்துக்கொள்ள தலைமை விரும்புகிறது. எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும் இன்று வியாழக்கிழமை சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி உடைவுற்றது.
இதனால் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி நடத்திய கிழக்கு மாகாணத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் தற்சமயம் எதிர்க்கட்சி வரிசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 இக்கட்சியில் அதவுல்லா கட்சியின் உறுப்பினர் அண்மையில் இணைந்து கொண்டமையால் தற்போது 8 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 4 உறுப்பினர்களுடன் இப்போது ஐ.ம.சு.கட்சியில் இருந்து இணைந்த உறுப்பினரையும் சேர்த்து 5 உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிஸின் 3 உறுப்பினர்களுமாக 27 பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply