எம்.ஆர்.ஏ. நிஷா:
அடை மழையினால் வெள்ளக் காடாக ஒலுவில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் காணப்படுகின்றது.
குறித்த அசௌகரிய நிலையினால் மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.
பலத்த மழையை அடுத்து கழியோடை ஆறு உடைப்பெடுத்தால் பல்கலைக்கழகத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கட்டடங்களுக்குள் சுமார் நான்கு அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் பரவிக்கிடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,
பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளை தொடர முடியாத நிலையினாலும் மாணவர்களின்
பாதுகாப்பு கருதியும் விடுதிகளில் இருந்து அவர்களை வெளியேறுமாறு
அறிவிக்கப்பட்டதாகவும்
இதற்கமைய விடுதிகளில் தங்கியிருந்த சுமார் 1,500 மாணவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல்
சத்தார் தெரிவித்தார்.
மேலும்,
பரீட்சை நடைபெறவுள்ள மாணவர்களுக்கான புதிய திகதி விபரங்கள்
மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply