ஜனாதிபதி
தேர்தல் நெருங்கி கொண்டு வரும் இந்த தருணத்தில் ஒட்டுமொத்த சிறுபான்மை
சமூகமும் ஒரு பக்கமாக அலையென திரண்டு வருவதனை பார்த்தால் 2015 முதல்
நாட்டில் நல்ல எதிர்காலம் மலர போவது தெரிகிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக
முஸ்லிம் மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் அகில இலங்கை மக்கள்
காங்கிறஸின் வளர்ச்சியை பார்த்தால் எதிர்வரும் ஒருசில வருடங்களில் slmc
என்கின்ற கட்சி இருந்ததாக அறிய வரலாற்று நூல்கள் தேவைப்படலாம்.
இலங்கை நாடே
ஒட்டுமொத்தமாக ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும் போது முஸ்லிம் மக்களின்
தனித்துவ குரலாக ஒழிப்போம் என தம்பட்டம் அடித்துதிரிந்த முஸ்லிம் மக்களின்
முன்னால் உரிமைக்குரல் என என்ணத்தோன்றும் slmc இன்றுவரை மௌனம் காப்பாத்து
ஏன்?
முஸ்லிம், தமிழ்,மக்களுக்கு இவ்வளவு காலமும் இடம்பெற்றுவந்த கொடூர
சம்பவங்கள் தெரிந்தும் இந்த அரசோடு ஓட்டிக்கொண்டு செய்து வைத்த பொம்மை
போன்று மௌனமாக இருப்பதன் மூலம் slmc சாதிக்க எண்ணுவது எதனை?
இந்த
அரசிலிருந்து முதலில் வெளியேறும் என எல்லோரும் எதிர்பார்த்தும் ஜனாதிபதி
பலதடவைகள் வெளியேற சொல்லியும் அட்டைப்போல் ஓட்டிகொண்டிருப்பதன் மர்மம்
என்ன? என சிந்திக்க தோன்றுகின்றது.
இன்று வெளியாகலாம் ,நாளை வெளியாகலாம் என
மக்கள் மணத்தில் ஆர்வத்தை ஏட்படுத்திவிட்டுகொண்டு சரியான முடிவை எட்டாமல்
தவிப்பதன் மூலம் slmc மக்களுக்கு எதனை சொல்ல வருகிறது?
acmc கட்சியின்
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவால் மக்கள் ACMC தலைமையை தலையில்
தூக்கிவைத்து கொண்டாடி கொண்டிருக்கிறது SLMC கட்சியின் அழிவை நோக்கிய
பயணத்தின் ஆரம்பம் என்பதனை உணர்த்துகிறது.
கடந்த காலங்களில் நாட்டின்
தலைமையை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த SLMC தட்போது அந்த நிலையையும்
இழந்து ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நிலையை ஆழ்ந்து நோக்கும்போது கட்சியின்
தலைமையின் வழிகாட்டலையும் கருத்துக்களையும் பின்தொடர்பவர்கள் குறைவு என்பது
தெளிவாக தெரிகிறது.
பலரும் கட்சி தலைமை மாறவேண்டும் என்ற கோரிக்கைகளை
பலமாக வலிவுருத்திக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் இதுவரை கட்சி உயர் பீட
கூட்டங்களை கூட்டியும் எந்த முடிவுகளையும் எட்டாமல் இருப்பதன் மூலம்
கட்சி ஆட்டம்கண்டு கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
இது இப்படியே
தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் SLMC இன் நிலைமை கேள்விகுறியே.
தட்போதைய
சூழ்நிலையில் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்ட நோயாளி போல இருக்கும்
SLMC கட்சி நாளை கூட போகும் உயர் பீட கூட்டத்தின் முடிவிலயே தங்கி
இருக்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை.
குறுகிய காலத்தில் பாரிய சரிவை
எதிர்நோக்கும் SLMC அழிவிலிருந்து மீழவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே இன்று கூடப்போகும் கூட்டத்தில் அரசுக்கு முட்டு கொடுக்கும்
கொந்தராத்துக்காரர்களை துரத்தியடித்து மக்களின் நலன் கருதி எடுக்க
வேண்டிய நல்ல தீர்மானத்தை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
மக்கள்
எல்லோரும் ஒரு பக்கமாக பயணிக்கும் இவ்வேளையில் முஸ்லிம்களின் பிரதான கட்சி
வேடிக்கை பார்ப்பது ஏன்? ACMC கட்சி செய்தது போல பட்சோந்திகளை கழட்டிவிட்டு
விட்டு மக்களையும் நாட்டையும் நேசிக்கும் மக்கள் பிரதிநிதிகளை
கூட்டிக்கொண்டு இந்த ஹிட்லர் ஆட்சியிலிருந்து வெளியேறுங்கள் .
இல்லாது,
குழப்பமான சூழ்நிலைகாரணமாக முடிவெடுக்க முடியாது போனால் கட்சி தலைமையை
இருதய சுத்தியுடன் மக்கள் நலன் விரும்பும் ஒருவருக்கு விட்டு கொடுக்க
முன்வாருங்கள் என SLMC கட்சிக்கு வாக்களித்த ஒருவனாகவும் இலங்கை முஸ்லிம்
என்ற வகையிலும் வேண்டுகோள்விடுக்கிறேன்.'
என ஐக்கிய ஜனநாயக மனித உரிமைகள்
கட்சியின் தேசிய கொள்கை பரப்பு பேட்சாளரும் அல்-மீசான் அறக்கட்டளை
பணிப்பாளருமான தேசமான்ய அல்-ஹாஜ் ஹுதா உமர் வேண்டுகோள்விடுத்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, December 27, 2014
முஸ்லிம்களின் பிரதான கட்சி வேடிக்கை பார்ப்பது ஏன்? - அல்-ஹாஜ் ஹுதா உமர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
No comments:
Post a Comment
Leave A Reply