உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ளவில்லை என்ற மன
அழுத்தத்தினால் மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து
கொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தவராஜா மஞ்சுளா (வயது – 19) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
பெறுபேறுகள் 2C மற்றும் S வந்ததையிட்டு மன அழுத்தத்தில்
வீட்டில் இருந்துள்ளார்.
வீட்டில் கடைசி பிள்ளையான இவர், நேற்று
ஞாயிற்றுக்கிழமை சகோதரியுடன் வீட்டில் இருந்த போது, அறைக்குள் தூக்கிட்டு
தற்கொலை செய்துள்ளார்.
இந்த நேரம் குறித்த பாடசாலை ஆசிரியரான தாயார், சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிக்காக பாடசாலைக்கு சென்றுள்ளார்.
அதன்போது,
குறித்த மாணவி தற்கொலை செய்துள்ளார். சகோதரி சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு பெற்றோருக்கு
அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் பெற்றோர் யாழ். பொலிஸாருக்கு தகவல்
வழங்கியுள்ளனர்.
பின்னர், யாழ். நீதிவான் நீதிபதி சென்று சடலத்தினை
பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா
வைத்தியசாலையில் ஒப்படைக்கபட்டுள்ளது.
குறித்த மாணவியின் சடலம் தொடர்பான விசாரணையினை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்விப் பொதுதத்தராதரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காமையின் காரணத்தால் தான் தற்கொலை செய்வதாகவும் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனவும் எழுதியுள்ள கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply