blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, December 15, 2014

புலி தீவிரவாதிகள் அரசியலில் ஈடுபடும் போது அரச படையினர் அரசியலில் ஈடுபட்டால் என்ன?: பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச!

புலி தீவிரவாதிகள் அரசியலில் ஈடுபடும் போது, அரச படையினர் அரசியலில் ஈடுபட்டால் என்ன என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

ஓய்வுபெற்ற படையினரையும், சேவையில் உள்ள படையினரையும், இலங்கை அதிபருக்கு ஆதரவு திரட்டும் பணியில்,  அரசாங்கம், ஈடுபடுத்தியுள்ளதாக, எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டு தொடர்பாகவே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைக்கு ஓய்வுபெற்ற படையினரை ஈடுபடுத்துவதாக என்மீது குற்றம்சாட்டுபவர்கள் ஒன்றை மறந்து விட்டனர்.

சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் தளபதியாக இருந்து கொண்டு தான் அரசியலில் பிரவேசித்தார்.அப்போது அவர் ஜெனரல் தரத்தில் இருந்தார்.

2010ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக அறிவித்த பின்னர் தான், சரத் பொன்சேகாவின் பதவி விலகலை சிறிலங்கா அதிபர் ஏற்றுக் கொண்டிருந்தார்.

2009 ஒக்ரோபர், நவம்பரில் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு  திணைக்களம் நேர்காணலுக்கு அழைத்தமை தொடர்பாக, அமெரிக்காவில் இருந்து சரத் பொன்சேகா தம்முடன் கலந்துரையாடினார் என்பதை ஜேவிபி வெளிப்படுத்தியுள்ளது.

இந்த தேர்தலில் பெரும்பாலான படையினர் அரசாங்கத்தையே ஆதரிப்பர்.

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிறந்த அரசியல் தலைமையை வழங்கிய அதிபர் மகிந்த ராஜபக்சவை குற்றச்சாட்டுகள் மூலம் வீழ்த்தி விட முடியாது.

ஓய்வுபெற்ற படையினர் அரசியலில் ஈடுபடுவதற்கோ, தேர்தலில் போட்டியிடுவதற்கோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதற்கோ, எந்த தடையும் இல்லை. அது அவரவர் விருப்பம்.

ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவை விட, மேலும் பல ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.பல்வேறு அரசியல் கட்சிகளிலும் அவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர், 1989ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதை மறந்து விட்டனர்.

1980களின் பிற்பகுதியில்  புலிகள் தவிர ஏனைய எல்லா தீவிரவாத அமைப்புகளும் அரசில் கட்சியாக பதிவு செய்து கொண்டு தேர்தலில் போட்டியிட்டன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►