blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, December 8, 2014

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியானதும் முடிவுகட்டுவேன்! பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி உறுதி!!

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு  ஜனாதிபதியானதும் முடிவுகட்டுவேன்!  பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி உறுதி"மஹிந்த அரசின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் சில இடித்தழிக்கப்பட்டன. பலவற்றின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு மஹிந்த அரசு துணைபுரிந்தது என்பதனை இந்த அரசில் முன்னாள் அமைச்சராக இருந்த நான் வெட்கப்பட்டுக் கூறுகின்றேன்.

எனவே, ஜனவரி 8ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றியடைந்து பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான அராஜக செயல்களுக்கு முடிவு கட்டுவேன்." - இவ்வாறு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எதிரணியின் பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட 'துஆ' பிரார்த்தனையும், அவரைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எனது வெற்றியின் பின்னர் உருவாகும் புதிய அரசு இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் மதத் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்கும்.

சிங்கள மொழி பேசும் பௌத்தர்கள், தமிழ்மொழி பேசும் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலையை நான் ஜனாதிபதியானதும் ஏற்படுத்துவேன்.

எனவே, இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. - என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பௌசான் அன்வர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி மற்றும் றியாஸ் ஸாலி ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►