ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இன்று உத்தியோகபூர்வமாக ரவூப் ஹக்கீம் அறிவித்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் மு.காவின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் மு.காவின் ஆதரவு எந்த வேட்பாளருக்கு என்று தீர்மானம் எடுத்துக் கொள்வதில் பெரிய இழுபறி நிலை காணப்பட்டு வந்தது.
இதனால், மு.காவின் உயர்பீடம் பல சுற்று கலந்துரையாடல்களில் ஈடுபட்டது.
மு.கா தமது முடிவினை தெரிவிப்பதில் காலதாமதத்தை ஏற்படுத்திக் கொண்டு வந்தமையால், தமது கட்சி மஹிந்தராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குமென்று அக்கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் முடிவு செய்திருந்த வேளையில், மு.காவின் நேற்றைய அறிவிப்பு கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதே வேளை, இன்று மாலை கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முற்றத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக நடைபெற இருக்கின்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம், செயலாளர் ஹஸன்அலி, பைசால் காசிம், ஹரீஸ் ஆகியோர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது இவர்கள் கொழும்பில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, December 28, 2014
மு.கா மைத்திரிக்கு ஆதரவு; கல்முனையில் பட்டாசு மழை!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
No comments:
Post a Comment
Leave A Reply