blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, December 28, 2014

கல்முனையை பாரிய நகரமாக மாற்றுவோம்!!!: ரணில் விக்கிரமசிங்க

2005ம் ஆண்டில் தன்னால் முடியாமல் போனதை 2015 ஆண்டில் செய்வேன் என்றும், கல்முனையில் புதிய நகர் உருவாக்கப்படும் அத்துடன் கல்முனை அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்படும் கல்முனையை பாரிய நகரமாக மாற்றுவோம்
தேவையான காணிகளைப் பெற்றுத்தருவோம் அதனோடு இணைந்ததாக அம்பாறை விமானநிலையத்தையும் ஒலுவில் துறைமுகத்தை பிரதான துறைமுகமாக மாற்றி அமைப்போம்  நெல்லின் விலையை உத்தரவாத விலையாக 50 ரூபாவாக உயர்த்துவோம் இலங்கையில் உள்ள பிரதான பிரச்சினையான வேலையில்லா பிரச்சனைக்கு தீர்வு காண்போம் இதற்காக பத்து லட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி வழங்குவோம் கப்பல் வராத துறைமுகத்தை அமைக்கமாட்டோம் என்றும் திருக்கோணமலை துறைமகத்தியும் அபிவிருத்தி செய்வோம் என்றும் தெரிவித்தார்.

கல்முனை சந்தான்கேணி மைதானத்தில் நேற்று( 2014-12-27) இடம்பெற்ற மைத்திரி பாலசிறிசேனவை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை அமைப்பாளர் சட்டத்தரணி ரசாக்கின் தலைமையில் இடம்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்:

இப்பிராந்தியங்களில் தொழில் பேட்டைகளையும் உருவாக்கி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும், பச்சைத் தண்ணியை குடித்துக்கொண்டு பஸ்ஸில் செல்லும் வெளிநாட்டவர்கள் எங்களுக்குத் தேவையில்லை என்றும் அதற்குப் பதிலாக அதிக டொலர்களை செலவு செய்யக் கூடியவர்களே தங்களுக்குத் தேவை என்றும் தெரிவித்தார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கி இரண்டு முன்று வருடத்துக்குள் பிரச்சனைகளை தீர்ப்போம் என்றும் கூறினார்.

ஜனவரி 8ம் திகதி மைத்திரி தலைமையிலான அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் கல்முனை மார்க்கட் கட்டிடத்தையும் அபிவிருத்தி செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது சிங்களவர்களும்  சரி தமிழர்களாலும் சரி முஸ்லிம்களானாலும் சரி பட்டினியின் கீழ் தள்ளப்பட்டுள்ளதாகவும் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளதாகவும் தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவசரமாக 10 அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைக்கவுள்ளதாகவும் பெட்ரோலியத்தின் விலையையும் குறைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமையல் வாயுவின் விலையில் 300 ரூபாவை குறைக்கவுள்ளதாகவும் சமுர்த்திக் கொடுப்பனவுகளை நூற்றுக்கு இருநூறு வீதமாக அதிகரிக்கவுள்ளதாகவும் மக்களிடம் இருக்கும் பணத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் அதற்க்குச் சமனாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பெப்ரவரியில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தில் 5000 மேலதிக கொடுப்பனவை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்

மஹிந்த ராஜபக்ச அவர்களால் LLRC கொண்டுவரப்பட்டது அதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அவரால் காத்திரமான எந்த நிவாரணத்தை வழங்க முடிய வில்லை.

 பின்னர் அரசியலைக் கொண்டு செல்ல இனவாதத்தைக் கையிலெடுத்தார் பின்னர் மதவாதத்தைத் தூண்டினார் அதனுடாக ஒவ்வொரு மதவழிபாட்டுத் தலங்களையும் தாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார் தமிழ் முஸ்லிம்களைத் தாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேட முயற்சித்தார். பின்னர் குடு விற்பதர்க்கும் கேசினோ போன்ற சூதாட்ட நிலையங்களை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுத்தார். எதனோல் வியாபாரத்துக்கு வழிவகுத்தார் பின்னர் குடும்ப ஆட்சிக்கு வித்திட்டார் இதன் போது மகாநாயக்கத் தேரர்கள் இதற்க்கு எதிரான கருத்துக்களைக் கூறமுற்பட்டனர்  அதன்பின்னர் அவர்களுக்கு எதிராகவும் செயற்பட்டார். அதன் பின்னர் பல்வேறுபட்ட சேனாக்களை உருவாக்கினார் இனவாதத்தையும் மதவாதத்தையும் பேசி தெற்கில் தனது வாக்கு வங்கியை உயர்த்த முயற்ச்சித்தார் இறுதியில் என்னநடந்தது ஜாதிக ஹெல உறுமிய அரசாங்கத்தை விட்டு வெளியேறியது பின்னர் வியாழக்கிழமை ஆப்பம் சாப்பிட்ட மைத்திரி பாலசிறிசேன வெள்ளிக்கிழமை பொது வேட்பாளராக வெளியேவந்தார் இப்போது மகிந்த ராஜபக்சவுடன் சிங்களவர்களும் இல்லை தமிழர்களும் இல்லை முஸ்லிம்களும் இல்லை தற்போது கூறுகிறார் தான் அபிவிருத்திகளைச் செய்துள்ளதாக நாடுபுராயும் சென்று கூறுகின்றார். அதனனல் மிகவும் கஷ்ட்டப் பட்டதாகக் கூறுகின்றார் மகிந்தராஜபக்ச எனது நண்பர் அவர் கடுமையாக உழைத்ததனால் வருகின்ற 8ம் திகதி அவருக்கு ஓய்வு வழங்குங்கள் என்று கேட்கின்றேன் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தற்போது எல்லோரும் ஒன்றினைந்ததுள்ளதாகவும் அதாவது ஐக்கிய தேசியக் கட்சி,மைத்திரி பாலசிறிசென,சந்திரிக்கா வண்டாரனாயக்க குமாரத்துங்க, ஜாதிக ஹெல உறுமிய,சரத் பொன்சேக்காவின் கட்சி, றிசாத் பதியுத்தின் அமிரலி போன்றோரும் மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் சிவில் அமைப்புக்கள் எங்களுடன் இருக்கின்றன

இலங்கையில் வாழும் எந்த நபருக்கும் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றக்கூடிய உரிமை இருக்கவேண்டும் அதற்க்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்க முடியாது.மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரையும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்துவோம் தான் விரும்பிய மொழியைப் பேசுவதற்கு உரிமை உண்டு ஆங்கிலத்தையும் பாவிக்க முடியும் அதேபோன்று தான் விரும்பும் கலாசாரத்தையும் பின்பற்ற முடியும் அதன் மூலம் இலங்கையர் என்ற உரித்துரிமையை நாங்கள் பாது காப்போம் என்றும் கூறினார் தமிழ் முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினையையும் சிங்களவர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினையையும் தீர்ப்போம் என்றும் கூறினார் இலங்கையில் வாழும் எந்த மதத்தைப் பின்பற்றுபவர்கலானாலும் சரி நாங்கள் இனவாதத்துக்கு இடமளிக்க மாட்டோம் நமது தேசியக்கொடியில் சிங்களவர்களை மட்டுமல்ல தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களும் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளனர் மகிந்த ராஜபக்ச அவர்களால் ஏற்படுத்த முடியாது போன இன ஐக்கியத்தை மைத்திரி பலசிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளமன்ற உறுப்பினர் அனோமா கமகே, ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான தயாகமெகே,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஞ்சுளா பெர்னாண்டோ,அகில இலங்கள் மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார் போன்றோருடன் கட்சியின் பல்வேறு உறுப்பினர்களும் பொதுமக்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►