அவுஸ்திரேலியா தலைநகர் சிட்னியின் லின்ட் ஃகேப் (Lint Cafe) ஹொட்டலில் நேற்று காலை துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த தீவிரவாதி ஹாரூன் மோனிஸ் (Harron Monis) , 17 பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டான்.
அவனிடம் இருந்து 5 பேர் பாதுகாப்பாக தப்பி வெளியே ஒடி வந்தனர். எஞ்சியவர்களை மீட்பதற்காக பொலிசார் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் தீவிரவாதி ஹாரன் மோனிஸ் மற்றும் இரு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பலியான நபர்களில் ஒருவர் அந்நாட்டின் பிரபல வழக்கறிஞர் கத்ரீனா டவ்சன் (katrina dawson Age-38) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதியின் பிடியில் சிக்கிய தனது கர்ப்பிணி தோழி ஜூலி டெய்லரை (Julie Tailor) காப்பாற்றும் முயற்சியில் கத்ரீனா படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கத்ரீனாவின் மரணம் அவரது சக வழக்கறிஞர்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
நிந்தவூர் அல்-ஈமான் அழைப்பு வழிகாட்டல் நிலைய ஜனாஸா குழுவிற்கான பயிற்சிக் கருத்தரங்கு நேற்று செவ்வாய்க் கிழமை (08-04-2014) அல்-ஈமான் அ...
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply