பொது
எதிரணியின் ஏமாற்றுவலையில் சிக்கி முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழி தவற
மாட்டார்களென்று முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் வாதிகளும்
உறுதிபடத் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் சமூகம் வழங்கும் ஆதரவில் ஒருபோதும் எந்தக்
குறைவும் ஏற்படப் போவ தில்லையெனத் தெரிவித்த அவர்கள் இம்முறை ஜனாதிபதித்
தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அமோக வெற்றி பெறுவாரென அவர்கள்
நம்பிக்கை வெளியிட்டனர்.
சிறுபான்மை
மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டும்.
ஏனெனில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை அவர் நிவர்த்தி
செய்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு
பிரச்சினைகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மிகச் சிறுபான்மையாக வாழும்
முஸ்லிம்கள் சொற்ப பிரச்சினைகளையே எதிர்நோக் குகின்றனர்.
அவர்களின்
பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் எடுத்துச் சொல்லப்பட்ட போதெல்லாம் அவற்றுக்கு
உரிய முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
பொது எதிரணியும்
அதனைச் சார்ந்த தலைவர்களும் இன்று தேர்தல் வெற்றிக்காக இனிப்பான
வார்த்தைகளைப் பேசுகின்றனர்.
எனினும் இவர்களின் கடந்த கால வரலாறும்
சிறுபான்மை சமூகத்துக்குச் செய்த அநியாயங்களும் நாமறிந்ததே. ஐ. தே. க.
முஸ்லிம்களின் காவலன் தானென கூறி அந்த சமூகத்தையே கருவறுத்த சம்பவங்கள்
நிறையவே உள்ளன. முஸ்லிம் சமூகம் இதனை ஒருபோதும் மறந்துவிடாது, மறக்கவும்
கூடாது.
நிறைவேற்றதிகார
ஜனாதிபதி முறை சிறுபான்மை சமூகத்துக்கு பல்வேறு நன்மைகளைத் தந்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் முஸ்லிம்கள்
பல்வேறு நன்மைகளைப் பெற்றுள்ளனர். பலஸ்தீன மக்களின் பிரச்சினைக்கு குரல்
கொடுத்த ஒரேயொரு தலைவராக ஜனாதிபதி மஹிந்த இனங்காணப்பட்டுள்ளார்.
எனவே பொது
எதிரணியினரும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஒருபோதுமே
முஸ்லிம் மக்களுக்கு நன்மைகள் செய்யப் போவதில்லை.
அவ்வாறு நாம் நினைப்பது
ஒரு பகற்கனவே. எனவே முஸ்லிம்கள் இந்த விடயத்தில் நிதானமாக சிந்தித்துச்
செயலாற்ற வேண்டுமெனவும் வெற்றுக் கோஷங்களும் வெறும் வார்த்தைகளுக்கும்
அடிமையாகக் கூடாதெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அமைச்சர்களான
பெளஸி, அதாவுல்லாஹ், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர்களான
ஹிஸ்புல்லா, ஏ. ஆர். எம். ஏ. காதர், பைசர் முஸ்தபா, முன்னாள் எம்.பி.
அஸ்வர், முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், ஆளுநர் அலவி மெளலானா, அப்துல் காதர்
மசூர் மெளலானா, பேருவளை நகரசபை முன்னாள் தலைவர் மர்ஜான் பழல். புத்தளம்
நகரபிதா கே. ஏ. பாயிஸ் ஆகியோர் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து செயற்படுவது
தெரிந்ததே.
No comments:
Post a Comment
Leave A Reply