blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, November 3, 2014

மண்சரிவுக்குள்ளான மீரியாபெத்தை அபாய பிரதேசமாக பிரகடனம்

பாரிய மண்சரிவுக்கு உள்ளான பதுளை, கொஸ்லந்த, மீரியாபெத்த கிராமம், அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லாதிருக்கும் வகையில் வீதித் தடைகள் போடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பிரதேசத்தில் ஐந்தாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் போது, சுமார் 25 முதல் 30 அடி ஆழத்திலிருந்து இந்த சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில் 6 சடலங்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், மீரியாபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை தோன்றுவதாகவும் அச்சடலங்களை சரியாக அடையாளம் காண வேண்டுமாயின் அவற்றை குளிரூட்டப்பட்ட நிலையில் பாதுகாப்பது அவசியம் எனவும் விசேட சட்ட வைத்திய அதிகாரி எச்.டி.கே.வி.விஜயவீர தெரிவித்தார்.

மண்சரிவு இடம்பெற்ற பிரதேசத்தில் இருந்து மீட்கப்படும் சடலங்களின் உடற்பாகங்கள் பழுதடைந்துள்ளன.

மீட்கப்பட்டுள்ள சடலங்களை சுத்தப்படுத்தி உயிரிழந்த நபரை அடையாளம் காண்பதற்காக அவற்றை குளிரூட்டி பாதுகாப்பது அவசியம்.

கொஸ்லந்த வைத்தியசாலையில் இந்த வசதியின்மையால் சடலங்களை பாதுகாப்பதற்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

எனினும், கொஸ்லந்தையிலிருந்து பதுளைக்கு இடையில் காணப்படும் அதிக தூரம் காரணமாக அதில் பாரிய சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்புப் பணிகள் நேற்று ஐந்தாவது நாளாக தொடர்ந்த நிலையில், மண்சரிவால் மூடப்பட்டிருந்த மீரியாபெத்த வீதி கண்டுபிடிக்கப்பட்டது.

மண்சரிவினால், இந்த வீதியே முதலில் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உடனடியாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், பல உயிர் சேதங்களைத் தடுத்திருக்க முடியும் என சுற்றாடல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மண்சரிவில் சிக்குண்டு சடலமாக மீட்கப்பட்ட அறுவரில் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மண்சரிவால் 32 பேரே காணாமல் போயுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள மீரியாபெத்தைக்கு, பொதுமக்கள் செல்லாமலிருக்கும் வகையில், பொலிஸ் வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன.

இதேவேளை, புதையுண்ட மீரியாபெத்தையை நோக்கி மலையிலிருந்து வழிந்தோடிய நீரூற்றை, மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் பிரதேசத்தைத் தவிர்ந்த வேறு திசைக்கு திருப்பிவிடும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►