எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, November 1, 2014
எரிபொருள் விலையை இன்று முதல் சீரான மட்டத்தில் பேண நடவடிக்கை
நாடு முழுவதும் எரிபொருள் விலையை சீரான மட்டத்தில் பேணுவதற்கு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
இதற்கமைய, போக்குவரத்திற்காக அறவிடப்படும் கட்டணம் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ்.அமரசேகர குறிப்பிட்டார்.
இதற்கமைய, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், கொழும்பில் விற்பனை செய்யப்படும் விலைக்கு, எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும்வகையில் தாரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு லீற்றர், 80 – 100 ரக தார் 91 ரூபாவில் இருந்து 85 ரூபாவரையும், 60 – 70 ரக தார் 92 ரூபாவில் இருந்து 86 ரூபாவரையும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ஜூன் மாதம் பிரேசிலில் ஆரம்பமாக உள்ள நிலையில் இப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தீவ...
No comments:
Post a Comment
Leave A Reply