கடந்த 13ம், திகதி யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச குடாநாட்டிற்கான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிலையில் தினசரி பல லட்சம் ரூபா வருமானம் ஈட்டுமளவிற்கு பயணிகள் பாதுகாப்பான பயணத்திற்காக புகையிரத சேவையினை நாடி வருகின்றனர்.
ஆனால் இன்றைய தினம் ஆசன முற்பதிவுகளுக்காக சென்றிருந்த பயணிகள் காலை
7மணி தொடக்கம் பிற்பகல் 2மணிவரையில் புகையிரத நிலையத்தில் காத்திருந்து
ஆசனப் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதேவளை எதற்காக இவ்வளவு காலதாமதம் என பயணிகள் கேட்ட போது கணனி
மயப்படுத்தப்பட்ட, ஆசனப் பதிவு நடைமுறையில் சிக்கல் உள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் சென்று விடயம் தொடர்பில் கேட்டபோது
குடாநாட்டுப் பயணிகள் முழுமையாக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையினை
நாடுகின்றார்கள். ஆனால் அதற்கான ஆசனப் பதிவுகள் கணனி மயப்படுத்தப்பட்டவை.
எனவே யாழ்.புகையிரத நிலையத்திற்கு புகையிரத திணைக்களத்தின் முழுமையான வசதிகளும் கொண்டுவரப்படவில்லை.
தற்பொழுது தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் ஊடாகவே ஆசனங்கள் முற்பதிவு
செய்யப்படுகின்றன. அதனால் தினசரி கணனி செயன்முறையில் தடங்கல் உண்டாகின்றது.
எனவேதான் இந்த தாமதம் என கூறினர்.
எனவே வடமாகாணத்திற்கு தேர்தலை மையப்படுத்தி ஜனாதிபதி வருகை
தந்திருந்தார். அதற்கு புகையிரத சேவையும் ஒரு விளம்பரமாக
மாற்றப்பட்டிருந்தது.
இதனால் சமகாலத்தில் தொழில் நிமித்தமும், வேறு தேவைகளுக்காகவும்
தெற்கிற்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள
வேண்டியுள்ளது.
மேலும் 100ற்கு 90வீதமான பயணிகள் பேருந்து பயணம் 100வீதம் பாதுகாப்பற்ற
பயணம் என்னும் எண்ணத்தை கொண்டிருக்கின்றனர். அதனால் புகையிரத சேவையினை
அவர்கள் நாடுகின்றனர்.
இந்நிலையில் புகையிரத சேவை தினசரி பல லட்சம் லாபம் ஈட்டும் நிலையில்
லீசிங்கில் பேருந்துகளை கொள்வனவு செய்த, தமிழ் பேருந்து முதலாளிகள் தங்கள்
பேருந்துகளை ஒவ்வொன்றாக விற்பனை செய்யும் நிலை உருவாகியிருக்கின்றமையும்
இங்கே குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 19, 2014
தேர்தலை மையப்படுத்தி அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட யாழ்தேவி சேவை! திணறும் ரயில் திணைக்களம்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
No comments:
Post a Comment
Leave A Reply