பயங்கரவாதம்
தோற்கடிக்கப்பட்டு ஒருமித்த நாட்டை மக்களிடம் வழங்கினாலும் நாட்டை
பிளவுபடுத்தும் சிலரது திட்டம் இன்னும் முற்றுபெறவில்லை என ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.வெளிநாடுகளில் இருக்கும் எல்.ரி.ரி.ஈயினர் அதற்கான திட்டங்களை வகுக்கும் போது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிலர் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத்திற்கு மீண்டும் நாட்டை தாரைவார்க்கும் இந்த திட்டங்கள் தொடர்பாக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை இன்று முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்தபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply