blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, October 14, 2014

கல்முனை பிரதேச செயலகத்தினால் சர்வேதேச உள நல தினம் அனுஷ்டிப்பு

தகவல் முஹம்மட் ஹாத்தீம்:- உலகில் வாழ்கின்ற அனைத்து மனிதர்களும் உள நலத்துடன் வாழவேண்டும் என்ற அடிப்படையில் உலக உள நல தினம் ஒவ்வொரு வருடமும் ஓக்டோபர் 10 ஆம் திகதி முதல் 15 திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச
செயலளார் ஏ. விக்கிரமராச்சி,
நிர்வாக உத்தியோகத்தர் மனாஸ், உளவள ஆலோசகர்களான றினோஸ் ஹனீபா, ஏ.ஆர் தஹ்லான்,  சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தர்களான ரம்சான் மற்றும் ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் விஷேடமாக உளவளத்துணை உதவி வாரம் என்ற பாதாதையும் பொது மக்களுக்காக காட்ச்சிப்படுத்தப்பட்டது.

உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சைகள், கல்வி, தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள், சட்ட மற்றும் மருத்துவ உதவிக்கான வழிகாட்டல்கள், என பல்வேறுபட்ட ஆலோசனை, சிகிச்சை மற்றும் வழிகாட்டல்கள் நாட்டிலுள்ள  ஒவ்வொரு பிரதேச செயலகத்திலுமுள்ள உளவள ஆலோசனை உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►