போப் ஆண்டவர் பிரான்சிஸ், தான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ கடவுள் ஆயுள் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
77
வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக தென்கொரியா சென்றுவிட்டு,
வாடிகன் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் கூறுகையில், எனது இந்த பயணத்தின் போது மக்களின் பெருந்தன்மை நன்கு தெரிந்தது.
நான் எனது பாவங்கள், தவறுகள் குறித்து அறிய முயன்றேன், ஆனால் அதற்காக பெருமைப்படவில்லை.
ஏனெனில் நான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன், அதுவரை மட்டுமே கடவுள் எனக்கு ஆயுள் வழங்கியுள்ளார்.
நான் போப் ஆண்டவராக தெரிவு செய்யப்பட்டபோது இயற்கையாகவே பிரபலமாக தொடங்கினேன், தொடக்கத்தில் அது எனக்கு ஒருவித பீதியை ஏற்படுத்தியது.
60 அண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க பிஷப்புகள் ஓய்வு பெறுவது என்பது
நடைமுறையில் கேள்விப்படாத ஒன்றாக இருந்த நிலையில் தற்போது அது
சாதாரணமாகியுள்ளது.
எனக்கு முன்பு போப் ஆண்டவர் பொறுப்பில் இருந்த 16–ம் பெனடிக்ட்,
தொடர்ந்து நீண்ட நாள் பணியாற்ற முடியாது என கருதியதால் அப்பதவியில் இருந்து
ஓய்வு பெற்று அதற்கான கதவை திறந்து விட்டுள்ளார்.
மேலும், நான் நரம்பு கோளாறினால் மிகவும்
அவதிப்படுகிறேன், அதற்காக அர்ஜென்டினாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ
அணியினர் எனக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply