இடப்பற்றாக்குறை காரணமாக தனது
காரியாலயத்தில் பணியாற்ற முடியாதெனக் கூறி நுவரெலியா வலயக் கல்விப்
பணிப்பாளர் தனது அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறியுள்ளார்.
நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன்- ‘க.பொ.த உயர்தர பரீட்சையில்
கடமையாற்றும் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதியின்மை காரணமாக அவர்களுக்கு எனது
காரியாலயத்தை வழங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் எனது பணிகளை
முன்னெடுக்க முடியாதுள்ளது என்பதை அறியத்தருகின்றேன்’ என அவரது காரியாலய
நுழைவாயிலில் அறிவித்தலொன்றும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை
நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில்- வலயக்கல்விப் பணிப்பாளர்
அலுவலகத்தில் இல்லாதிருப்பது பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக வலயக்
கல்விப் பணிமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply