blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, August 18, 2014

எபோலா வைரஸ் நோயிலிருந்து உயிர் தப்பிய முதல் நபர்

அண்மைய நாட்களாக உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உயிர்கொல்லி வைரஸான எபோலா மாறியுள்ளது.


இந்நிலையில் எபோலா எனும் கொடூர நோயிலிருந்து ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு மரணத்தை தவிர மருந்து இல்லை என்று கூறப்படும் நிலையில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

நைஜீரியா நாட்டில் முதன்முதலாக பேட்ரிக் சாயெர் (Batric Sayer) என்ற லைபேரியா என்பவர் மூலம் எபோலா நோய் பரவியது.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பேட்ரிக் சாயெர் கடந்த யூலை மாதம் 20ம் திகதி உயிரிழந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் கடந்த யூலை மாதம் 25ம் திகதி உயிரிழந்தார்.
 
இதனைத் தொடர்ந்து, நைஜீரிய மக்களுக்கும் எபோலா கிருமித்தொற்று பரவத் தொடங்கியது.

இந்த தொற்றினால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட நைஜீரியாவை சேர்ந்த நபர் பூரணமாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஓன்யேபுச்சி சுக்வு தெரிவித்துள்ளார்.

நைஜீரியா முழுவதும் 12 பேர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவர்களில் 4 பேர் இறந்து விட்டதாகவும், இந்த தொற்றினால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட நபர் பூரணமாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்த வெளியேறியுள்ளதாகவும் மேலும் ஐந்து நோயாளிகள் முழுவதும் குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லாகோஸ் நகரில் எபோலாவுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் 40 படுக்கைகளுடன் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும், லாகோஸ் நகரில் எபோலா வைரஸ் தொற்றிய 189 பேரும், நாட்டின் தென்கிழக்கு மாநிலமான எனுகு-வில் ஆறு பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஓன்யேபுச்சி சுக்வு மேலும் குறிப்பிட்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.      

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►