blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, August 16, 2014

கண்ணில்லாமல் சாதிக்கும் சிறுவன்

கனடாவின் கியுபெக்கை சேர்ந்த 10 வயதுடைய பார்வையற்ற சிறுவன் கடந்த வாரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளான்.

பிறக்கும் போதே பார்வையற்ற Felix De St-Hilaire என்ற இந்த சிறுவன் blues இசையில் சிறந்து விளங்குவதுடன், கிட்டார் வாசிப்பதிலும் திறமையாகவுள்ளான்.

இந்த சிறுவன் பார்வையற்றவர்களிற்கான கோடைகால முகாமில் கிட்டாரை தனது காலில் வைத்த வண்ணம் B.B. King என்பவரின் “Every Day I Have the Blues” பாடலை முழுமையாக பாடியுள்ளான்.

முகாம் இயக்குநர் இதனை படமாக்கி முகப் புத்தகத்தில் பதிந்துள்ளார்.
அவர் நினைத்துப் பார்க்காத அளவிற்கு இணையம் மூலமாக படு வேகமாக இந்த நிகழ்வு பரவியுள்ளது. 90,000-ற்கும் மேற்பட்டவர்கள் இதனை பகிர்ந்துள்ளனர்.

குறித்த சிறுவனின் தாயார் Marie-Eve Soucy இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், Felix ஆறு மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்தவன். பிறக்கும்போதே பார்வையின்றி பிறந்தவன்.

சிறு குழந்தையில் சிறுவர்களிற்கான உயர் கதிரையில் இருக்கும் போதே சுருதி விளையாடுவான் என்று கூறியுள்ளார்.

Felix 6-வயதிலிருந்து கிட்டார் வாசிக்க தொடங்கியுள்ளான்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.           

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►