நீண்டகாலமாக கல்முனை பிரதேசத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று இரவு கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . இவரைக் கைது செய்யும் போது இவரிடம் இரண்டு கிலோ கஞ்சா இருந்துள்ளது. இவர் உகண
பிரதேசத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
நீண்டகாலமாக இந்த கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட இவர், நாட்டின் பல இடங்களில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்றும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவர் நேற்று இரவு அம்பாறையில் இருந்து சாய்ந்தமருது பிரதேசத்துக்கு வந்தபோதே கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவரைக் கஞ்சாவுடன் கைதுசெய்தனர்.
கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை பிரதேசங்களில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இவர், கஞ்சா கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட இவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். ( Thanks for JVP NEWS)
No comments:
Post a Comment
Leave A Reply