2015ஆம் ஆண்டு தெற்கில் நடத்தப்படவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு பொதுப்போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் காலி மாத்தறை அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை கேந்திரநிலையமாக கொண்டு 4 பஸ்நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்காக 85 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் ஹபராதுவ பஸ் நிலைய நிர்மாணப்பணிகளுக்காக 10 மில்லியன் ரூபாவும் மாத்தறை மாவட்டத்தின் பு{ஹல்வெல்ல பஸ்நிலைய நிர்மாணப்பணிகளுக்காக 15 மில்லியன் ரூபாவும் அம்பாந்தோட்டை லுணுகம்வெஹெர பஸ் நிலைய நிர்மாணப்பணிகளுக்காக 40 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வரிசையில் நிற்பதற்கான வசதி பஸ்களை நிறுத்துவதற்கான வசதி மின்சார வசதி மேலதிக பஸ்களை நிறுத்துவதற்கான வசதி சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காரியாலய வசதி சுகாதார வசதிகள் மற்றும் சாரதி நடத்துனருக்கான ஓய்வறை வசதிகள் என்பன இவ் இவ் அபிவிருத்திப் பணிகளில் மேற்கொள்ளப்படவுள்ளன.
2014ஆம் ஆண்டில் குளியாப்பிட்டிய தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வௌ மற்றும் குருணாகல மாவட்டத்தின் மெல்சிரிபுர ஆகிய இரண்டு பஸ்நிலையங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன.
2013ஆம் ஆண்டில் அம்பாறையில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் பானம மற்றும் திருக்கோவில் ஆகிய பஸ்நிலையங்களும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை யபஸ் நிலையமும் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply