மாயமான மலேசிய விமான பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற MH370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.
இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன்
பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட
நாடுகள் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில்
ஈடுபட்டது.
ஆனால் அங்கு விழுந்தது விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதி
செய்யப்பட்டது.
மேலும் விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் அஸ்திரேலியாவை
சேர்ந்த ஒரு நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
விமானம் மாயமாகி 5 மாதங்கள் ஆகியும்
இதுவரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் 4ம் திகதி, விமானத்தில் பயணம் செய்த 4
பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் 34,890 அமெரிக்க டொலர்கள்
எடுக்கபட்டு உள்ளதை கண்டு பிடித்துள்ளதாக மலேசிய
பொருளாதார குற்ற பிரிவு
பொலிஸ் அதிகாரி அஷானி அப்துல் கூறியுள்ளார்.
இதில் 3 பயணிகளின் கணக்கில் இருந்த பணம் 4 வது பயணிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
4வது பயணியின் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் கிளாங்க் பள்ளதாக்கு பகுதியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அஷானி கூறியதாவது:
இந்த விவரம் வங்கியின் கணக்கு வழக்குகளை
சரிபார்க்கும் போது தெரிய வந்ததாக கடந்த 2ம் திகதி உள்ளூர் வங்கி
உரிமையாளர் புகார் அளித்துள்ளார் என்றும் கண்காணிப்பு கமெராவில் பதிவான
விவரங்களை கொண்டு இதில் சந்தேகபடும் படியான நபர்களின் தொடர்பு உள்ளதா? என
விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 15, 2014
மாயமான மலேசிய விமான பயணிகளின் வங்கி கணக்கில் கொள்ளை: பரபரப்பு தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மெக்கோ கிளிகளை காணவில்லை கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக க...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply