நடைபெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் இன்று கல்முனை அபிவிருத்தி செய்யப்படவில்லை என்று எல்லோரும்
பேசிக்கொள்கின்றோம் ஆனால் பொருத்தமான தகைமையான தலைவர்களை தெரிவு செய்திருக்கின்றோமா? ஒரு தலைவனுக்கு மிக முக்கியமான விடயம் இரண்டு ஒன்று மொழி அறிவு இரண்டு ஆளுமை ஓடியாடி செய்யும் திறன். நான் அமைச்சராக இருந்த போது இக்கல்முனை மண்னை வளப்படுத்தியவன் திட்டமிட்டு இரவு பகல் பாராது பல சேவைகள் செய்தவன் கல்முனை நீதி மன்றம், பொதுச் சந்தை, பொது நூல் நிலையம், பொலிஸ் நிலையம் ஏன் பாடசாலைகள் ஏனைய பொதுக்கட்டிடங்கள் என்று பலவற்றையும் கட்டினேன்.
இன்று நீங்கள் உருவாக்கிய தம்பி ஹரீஸ் என்ன செய்கின்றார். எதற்காக அவரை நீங்கள் தலைவராக தெரிவு செய்திருக்கின்றீர்கள் சேவை செய்வதற்காக என்றால் எங்கே சேவைகள்? ஒழுங்காக அஷ்ரப் வைத்தியசாலையைக் கூட அபிவிருத்தி செய்திருக்கிறாரா? என பல கேள்விகளுடன் தனது பேச்சினை சிலாகித்து பேசினார். இவ்விழாவில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்தமாணவர்கள் மற்றும் க.பொ.த சா.தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply