காத்தான்குடி நகரசபைப் பிரிவில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47 பேர் குரங்குக் கடிக்கு இலக்காகியுள்ளனர்.
காத்தான்குடியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் சிறுவர்கள், மாணவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டம் கூட்டமாக வருகின்ற குரங்குகள் வீடுகளின் கூரைகள், பயிர்கள், மரங்களை சேதமாக்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
குரங்குகளால் ஏற்படுகின்ற தொல்லைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அபிருத்திக் குழு கூட்டத்தின்போதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக காத்தான்குடி நகர சபைத் தலைவரிடம் வினவியபோது, குரங்குகளை சுடுவதற்காக துப்பாக்கி வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் நகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
காத்தான்குடி சுகாதார அலுவலகம், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, காத்தான்குடி பிரதேச செயலாளர் ஆகியோரின் கடிதங்களுடன், குரங்குகளை சுடுவதற்காக துப்பாக்கி வழங்குமாறு கோரி கடந்த 10ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply