இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு
வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.
அவர்களை இங்கிலாந்து போலீஸார்,
ஐரோப்பா முழுவதும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இங்கிலாந்தைச்
சேர்நதவர் ஜெரிமி பாரஸ்ட். 30 வயதாகும் இவர் கணக்கு வாத்தியார். இவரது
வகுப்பில் படித்து வந்தவர் மேகான் ஸ்டேமர்ஸ். 15 வயதாகிறது இந்த மாணவிக்கு.
இருவருக்கும் இடையே பொருந்தாக் காதல் மலர்ந்தது. பல மாதங்களாக இது
நீடித்தது. இருவரும் பலமுறை உறவிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில்
மேகானுடன், பாரஸ்ட் திடீரென தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம்
இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் போர்ட் பியஸ்டா காரில்
இங்கிலாந்தை விட்டு தப்பி விட்டனராம். மேலும் தங்களது செல்போன்களையும்
இருவரும் கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து சசெக்ஸ் போலீஸார்
கூறுகையில், கடந்த வாரம்தான் இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத்
தெரிவிக்கப்பட்டது.
இருவரும் இங்கிலாந்தில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை.
அவர்கள் ஐரோப்பிய நாடுகள் ஏதாவது ஒன்றில் புகுந்திருக்கலாம் என்று
சந்தேகிக்கிறோம் என்றார்.
இருவரும் பிரான்ஸுக்குப் போயிருப்பதாக
முதலில் கூறப்பட்டது. ஆனால் பிரான்ஸில் அவர்கள் இருப்பது போலத் தெரியவில்லை
என்று பிரெஞ்சு போலீஸார் கூறியுள்ளனராம்.
இதுகுறித்து அவர்கள்
கூறுகையில், இருவரும் இங்கு இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. சாலை
மார்க்கமாக அவர்கள் வந்தது போலத் தெரியவில்லை. இதுதொடர்பாக அனைத்து எல்லைப்
பகுதி வீடியோ பதிவுகளையும் அலசி விட்டோம்.
அவர்கள் பெல்ஜியம், ஹாலந்து,
ஜெர்மனிக்குத் தப்பியிருக்க வாய்ப்புள்ளது. அல்லது வேறு ஏதாவது ஒரு
நாட்டுக்குப் போயிருக்கலாம் என்றனர்.
ஆசிரியருக்கும், மாணவிக்கும்
இடையே நீண்ட காலமாகவே உறவு இருந்திருக்கிறது. இதுதொடர்பாக அவர்களின் பள்ளி
நிர்வாகமும் கூட 7 மாதங்களுக்கு முன்பு இருவரையும் கூப்பிட்டுக்
கண்டித்துள்ளதாம்.
ஆனால் தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று
தெரிகிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
No comments:
Post a Comment
Leave A Reply