blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, July 17, 2014

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி : நீர்கொழும்பில் சம்பவம்…!

accident_17நீர்கொழும்பு பான்கடை சந்தியில் மோட்டார் சைக்கிளொன்று கொள்கலன் கனரக வாகனத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலியானதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (17) நீர்கொழும்பு பான்கடை சந்தியில் இடம்பெற்றது.

பொல்வத்தை , மினுவாங்கொடையைச் சேர்ந்த அனுர பிரியந்த என்ற 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் பலியானவராவார்.

சம்பவத்தில் மரணமடைந்தவர் புத்தளம் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் தொழில் புரிபவராவார். இவருக்கு ஒன்பது வயதில் ஆண் பிள்ளையும், நான்கு வயதில் பெண் பிள்ளையும் உள்ளனர். மனைவி எட்டு மாத கர்ப்பிணியாவார்.

இன்று அதிகாலை தொழிலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக கொள்கலன் கனரக வண்டியின் சாரதியான ஜா- எல பிரதேசத்தைச் சேர்ந்தவர் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸார் இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►