தெற்கு மும்பையில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த டார்டியோ பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.இன்று காலை டார்டியோவில் உள்ள ரத்தன் டாடா காலனியில் உள்ள கட்டிடத்தின் சுவர் திடீரென சரிந்தது. அங்கு கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருவதன் காரணமாகவே இக்கட்டிடத்தின் சுவர் சரிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. சுவர் சரிந்ததில் இடிபாடுகளில் சிக்கிய ஏழு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் இருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஐந்து பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply