
துபாயில் உள்ள தனியார் பல் வைத்தியசாலை இதை உருவாக்கி உள்ளது.
இந்த பல் செட்டின் மதிப்பு 90 இலட்ச ரூபாய்களாகும் (இந்திய ரூபாய்) 24 தூய கரட் தங்கத்தில் வண்ண வண்ண 160 வைரங்கள் அதில் பதிக்கப்பட்டுள்ளது.
இது சிரிக்கும் போது ஒளி தரும் புன்னகையை கொடுக்கும். இந்த பல் செட்டை தயாரித்த பல் வைத்தியசாலை பெல்ஜியத்தை சேர்ந்த உலக வைர நிறுவனத்திடம் இந்த வைரங்களுக்கான நம்பகத்தன்மை சான்றிதழை பெற்றுள்ளது.
ஆனால் இதை வாங்குபவர் இதனை ஒரு அழகுக்காக அணிந்து கொள்ளலாம், ஆனால் இதை அணிந்து கொண்டு உணவு உண்ண கூடாது.
இது குறித்து குறித்த பல் வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியர் மஜித் நஜி துபாயை சேர்ந்த ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேர்க்கும் முகமாகவே இந்த செயற்கை பல் செட் உருவாக்கபட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply