blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, July 26, 2014

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் முதலாவது பதக்கத்தை இலங்கை சுவீகரிப்பு


பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் முதலாவது பதக்கத்தை இலங்கை சுவீகரிப்புஸ்கொட்லந்தின் கிளாஸ்கோவில் இடம்பெற்றவரும் பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கை தனது முதல் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.


இலங்கை குழாத்தின் தலைவராக செயற்படும் சுதேஷ் பீரிஸ் பளுதூக்கும் போட்டிகளில்   62 எடைப்பிரிவின் கீழ் வெள்ளிப்பதக்கதை சுவீகத்தார்.

இதன் மூலம் இலங்கை அணி பதக்கப்பட்டியலில் 13 இடத்தை அடைந்ததுள்ளது.
Sudesh+Peiris+20th+Commonwealth+Games+Weightlifting+Ives-yRrXCZl
இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற பட்மிட்டன் போட்டியில் இலங்கை பாபடோஸ் அணியை வெற்றிக்கொண்டமை குறிப்பிடதக்கது.

நீச்சல் போட்டிகளில் இங்கிலாந்து சார்பில் நீச்சல் போட்டிகளில் கிரிஸ் வோக்கர் மற்றும் பென் ப்ரவுட் ஆகியோர்  தங்கப்பதக்கங்களை வெற்றிக்கொண்டமை குறிப்பிடதக்கது.

இதேவேளை, நேற்றைய தினம் பொதுநலவாயப் போட்டிகளில் புதிய சாதனைகள் சில நிலை நாட்டப்பட்டன.

மகளிருக்கான 100 மீறறர் பெக்ஸ்ட்ரொக் நீச்சல் போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் இ சீபோம் 59 செக்கன்களும் ஐந்து ஒன்று விநாடிகளில் தனது போட்டி நேரத்தை  நிறைவு செய்து இவர் சாதனை நிலை நாட்டியமை குறிப்பிடதக்கது.
Sudesh+Peiris+20th+Commonwealth+Games+Weightlifting+OvBwZ1_qjGIl
இதேவேளை ,ஆடவருக்கான 400 மீற்றர் தனி நபர் மெட்லி நீச்சல்  போட்டியில் ஸ்கொட்லந்தின் டென்னி வொல்லஸ் சாதனை படைத்ததோடு ஆடவருக்கான 10 மீற்றர் குறி பார்த்து சுடும் போட்டியில் இங்கிலாந்தின் டெனியல் ரிவர்ஸ் புதிய சாதனையொன்றை நிலை நாட்டினார்
பதக்கப்பட்டியலில் இங்கிலாந்து தொடர்நதும் தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

பதக்ககப்பட்டியலில் இங்கிலாந்து 12 தங்கப்பதக்கங்களுடன்  32 பதக்கங்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியா 11 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் ஸ்கொட்லாந்து 7 தங்கப்பதங்களுடன்  மூன்றாம் இட்த்திலுள்ளது.

நான்காம் இடத்தை நான்கு தங்கப்பதங்களுடன் கனடா கைப்பற்றியுள்ளதோடு இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களுடன்  ஐந்தாம் இடத்திலுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►