
இந்நிலையில், பிரான்ஸில் ஜேர்மனியுடன் இடம்பெற்ற போரின்போது உயிரிழந்த வீரர்களின் கல்லறையை பார்க்க மாணவர்கள் அனைவரும் நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டனர்.
குறித்த கல்லறை பிரான்ஸ் நாட்டில் (Arras) அர்ரஸ் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த கல்லறையின் பெயர் நெவில்லி சென் வாஸ்ட் வோர் செமட்ரி (Neuville-St Vaast war cemetery) என்பதாகும். 44,833 கல்லறைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் அந்த கல்லறையில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். (Mitch Glover) மிட்ச் குளோவர் என்ற 14 வயது மாணவனும் மற்ற மாணவர்களுடன் இணைந்து தனது கையடக்கத் தொலைபேசியில் பல புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
நாடு திரும்பிய மாணவன் தான் எடுத்த புகைப்படங்கள் பார்த்தபோது, அதில் மூன்று படங்கள் மாத்திரம் கறுப்பு வெள்ளையாக இருந்தது. அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தில் நிழல் உருவத்தில் ஒருவர் நிற்பது போன்றும் தெரிந்தது.

அதிர்ச்சியடைந்த அந்த மாணவன் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் விடயத்தை கூறியுள்ளார். இதுகுறித்து மாணவனின் பாடசாலை ஆசிரியர் குறிப்பிடுகையில், அந்த கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்ட வீரர் ஒருவரின் பேயாக இது இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply