சுவிட்சர்லாந்து
நாட்டில் உள்ள வங்கிகளில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ள
இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தயாரித்து வருகிறதாம்.
கருப்புப்
பணத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள முக்கிய
வெற்றி இது என்று கருதப்படுகிறது. இந்தப் பட்டியலை இந்திய அரசிடமும் சுவிஸ்
அரசு வழங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு
பெயர்களில் பணம் போடப்பட்டிருந்தாலும் அவற்றின் உண்மையான நபர்களை அடையாளம்
கண்டறிந்து அதன் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறதாம். சுவிஸ்
வங்கிகளில் பணம் போட்டு வைத்துள்ள தனி நபர்கள், நிறுவனங்களைப்
பட்டியலிட்டு வருகிறதாம் அந்த நாட்டு அரசு.
இதுவரை யார்
யார் அடையாளம் காணப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விவரம்
தெரியவில்லை. இந்தியர்களின் கருப்புப் பணம் கிட்டத்தட்ட ரூ. 14,000 கோடி
அளவுக்கு சுவிஸ் வங்கிகளில் புதைந்து கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
Leave A Reply