இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 29 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்திய மீனவர்கள் 6 படகுகளுடன் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள், தலைமன்னார் கடற்றொழில் திணைக்களத்திடம் இன்று காலை ஒப்படைக்க்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களை நாளை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பெணர்டிக் சகாயநாதன் மிராண்டா தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply