எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 29, 2014
இலங்கையர்கள் 153 பேரைக் கொண்ட படகுடனான தொடர்புகள் துண்டிப்பு
புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகை தொடர்பில் அவதானமாக செயற்படுவதாக அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தின் கடல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலன்னா மெக் டயர்மன் ஏ.பீ.சீ. செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுடன் வந்த படகில் எரிப்பொருள் ஒழுக்கு ஏற்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவிற்கு
300 கிலோ மீற்றர் தொலைவில் மேற்கு கடற்பரப்பில் உள்ளதாக கடந்த வியாழக்கிழமை அவுஸ்திரேலிய கடல்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தென் இந்தியாவில் இருந்து 37 சிறுவர்கள் உள்ளடங்களாக 150 பேருக்கும் அதிகமானோர் குறித்த படகில் இருப்பதாக ஏ.பீ.சீ. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த படகில் உள்ள 153 பேரும் இலங்கையர்கள் என பீ.பீ.சீ செய்தி சேவை தெரிவித்திருந்தது .
இவ்வாறான இரண்டு படகுகள் அந்த கடற்பரப்பில் காணப்படுவதாக அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் அலன்ன மெக் டயர்மன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவ்வாறான படகுகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்த வில்லை.
அவுஸ்திரேலிய தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அலன்ன மெக் டயர்மன் தெரிவித்த கருத்து:-
“வெள்ளிக்கிழமை கடல் நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் படகு ஒன்று வந்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர். பின்னர் படகு ஒன்று அடையாளம் காணப்பட்டது. இரண்டு படகுகள் இருப்பதாகவே மக்கள் தகவல் வழங்கியிருந்தனர். கிறிஸ்மஸ் தீவில் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் படகில் இருக்கும் மக்களுக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்க வில்லை”
எவ்வாறாயினும் வேறு படகுகள் தீவை நோக்கி வர வில்லை என்றும் கடற் படையின் படகுகள் காணப்பட்டதாகவும் கிறிஸ்மஸ் தீவின் பிரதேச உறுப்பினர் பிலிப் வு வை மேற்கோள் காட்டி அவுஸ்திரேலிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவ்வாறான படகு தொடர்பில் அவுஸ்திரேலிய புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பான அமைச்சர் ஸ்கொட் மொறிசன் இன்னும் உறுதிப்படுத்த வில்லை.
இதேவேளை , இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 153 பேருடன் வந்த படகுடனான தொடர்புகள் நேற்று நேற்று காலை முதல் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்றபாட்டு அமைப்பின் இனைப்பாளரான இயன் ரின்டோலை மேற்கோள் காட்டி பீ.பீ.சீ செய்தி வெளியிட்டுள்ளது.
9 மணித்தியாலமாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த படகில் உள்ள அனைவரும் இலங்கை தமிழர்கள் என புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்திரேலிய அமைப்பு தெரிவித்துள்ளது.
படகில் உள்ளவர்கள் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை எதிர்பார்ப்பதுடன் , படகில் வருபவர்களை அவுஸ்திரேலியா பொறுபபேற்காது என்ற பொறிமுறையை அவர்கள் அறியவில்லை என்று அவுஸ்திரேலிய செயற்பாட்டு அமைப்பின் இனைப்பாளர் இயன் ரின்டோல் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
மகப்பேற்று சிகிச்சை மற்றும் உளவியல் சுகாதாரப் பயிற்சிகளைப் பெறும் தாதி மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்...
No comments:
Post a Comment
Leave A Reply